4 மாத குழந்தையை பேருந்தில் விட்டுச்சென்ற மர்ம நபர் - போலீசார் விசாரணை

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பேருந்தில் 4 மாத குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-02-06 13:05 IST
புதுச்சேரி

சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி சரஸ்வதியுடன் புதுச்சேரியில் நடைபெறம் விழாவில் கலந்து கொள்ள காலை 4 மணிக்கு பேருந்தில் ஏரி உள்ளனர். 

பேருந்தில் நீலாங்கரை அக்கரை வட்டர் டேங்க் நிறுத்தம் பகுதியில் ஏறிய ஆண் ஒருவர் கூட்டம் அதிகமா இருப்பதால் குழந்தையை கொஞ்சம் வைத்திருங்கள் என்று கூறி சரஸ்வதியிடம் ஒப்படைத்துள்ளார்.

குழந்தை சரஸ்வதி மடியிலேயே தூங்கி விட்டது. பேருந்து மகாபலிபுரம் அருகே வந்த போது குழந்தை சிறுநீர் கழித்ததால் சரஸ்வதி குழந்தையைக் கொடுத்த நபரை தேடியுள்ளார்.

பேருந்தில் அந்த நபர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி  தனது கணவன் கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம்  இந்த உண்மையை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்தின் டிரைவர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தை நிறுத்தினர். 

குழந்தையை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சரஸ்வதி,  இந்த நிகழ்வு குறித்து போலீசாரிடம் விளக்கி உள்ளார்.  பின்னர் குழந்தையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், நீலாங்கரை காவல் நிலையத்திற்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பி உள்ளார். 

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பேருந்தில் தம்பதியிடம் கொடுத்து சென்ற குழந்தைக்கு மருத்து  சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரித்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் குறித்து பல தகவல் கிடைத்துள்ளது.  மேலும் விசாணைக்கு பிறகே குழந்தை உரியவரிடம் அல்லது குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்