உடல்நலக் குறைவால் காலமான சுதந்திரப் போராட்ட தியாகி

நேதாஜி படைப்பிரிவில் பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி கே.ஆர்.வெள்ளைச்சாமி உடல்நிலைக் குறைவால் காலமானார்.;

Update:2022-02-04 18:35 IST
திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெள்ளைச்சாமி (98). சுதந்திர போராட்ட தியாகியான இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் (ஐ.என்.ஏ) இந்திய தேசிய ராணுவ படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். பர்மாவிலும் ஒரு சில ஆண்டுகள் நேதாஜியின் ராணுவ படையில் சிப்பாயாக பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை காலமானார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவரது இறுதி சடங்கு நவல்பட்டு பர்மா காலனி பகுதியில் நடைப்பெற்றது. அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இறுதி ஆஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்