கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கொலை ; உடலை வீட்டில் ஒரு வாரம் மறைத்து வைத்த மனைவி
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கட்டையால் அடித்து கொலை செய்து உடலை ஒரு வாரம் வீட்டில் மறைத்து வைத்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவனது மகன் சேதுபதி (வயது 33) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாட்டுக்கறி விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு பிரியா (வயது 31) என்ற மனைவியும் கோமதி (வயது 07)என்ற மகளும் 10 மாத ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பிரியாவும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதீஷ்குமார் (வயது 40)என்பவரும் சேர்ந்து சேதுபதி வீட்டிலிருந்து ஒரு தண்ணீர் நிரப்பும் பிளாஸ்டிக் பேரலை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.
அப்போது வீதியில் துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் என்னவென்று விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் ஒருவர் அந்த பேரலின் மூடியைத் திறந்த போது அதற்குள் ஒரு உடல் போர்வையால் மூடப்பட்ட நிலையில் இருந்ததும் மேலும் துர்நாற்றம் அதிகமாக வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பேரலுடன் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியா மற்றும் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில். பிரியாவிற்கும் வீட்டுக்கு அருகில் வசித்த சதீஷ்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது,இதை அறிந்த சேதுபதி பிரியாவை கண்டித்துள்ளார்.ஆனால் பிரியா கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து சதீஷ்குமார் உடன் பழகி வந்தார்.
இதனால் பிரியாவை சேதுபதி கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா கள்ளக்காதலன் சதீஷ்குமார் இடம் தனது கணவர் கள்ளக்காதலுக்கு பெரும் தடையாக இருக்கும் சேதுபதியை கொலை செய்ய திட்டம் போட்டனர்.
அதன்படி கடந்த 17ஆம் தேதி பிரியா தனது வீட்டில் வைத்து சதீஷ்குமார் உடன் இணைந்து சேதுபதியை கட்டையால் அடித்துக் கொன்றனர் பின்னர் உடலை அங்கு தண்ணீர் பிடிக்கும் காலி பேலில் போட்டு அதன் மீது போர்வை போட்டு மூடியால் மூடி விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதல் லேசான துர்நாற்றம் வீட்டிற்குள் வீசவே நேற்று இரவு சேதுபதியின் உடலை கொண்டு சென்று எங்கயாவது போட முயற்சி செய்யும் போது கையும் களவுமாக சிக்கி கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.