தமிழகம் முழுவதும் நாளை 16-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நாளை 16-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-25 08:20 GMT
கோப்புப்படம்
சென்னை, 

இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. 

இந்நிலையில், 16-வது முகாம் நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக  சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்தநிலையில், இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு (நாளை) மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வழக்கம்போல், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்