போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 1,046 பேருக்கு வேலை வாய்ப்பு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஏற்பாடு

போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 1,046 பேருக்கு வேலை வாய்ப்பு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஏற்பாடு.

Update: 2021-12-23 22:07 GMT
சென்னை,

போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 2 நாட்களில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் வேலூர் போன்ற இடங்களில் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டு வேலைக்கான விண்ணப்ப மனுக்களை கொடுத்தனர்.

274 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கின. கலந்து கொண்ட இளைஞர்களில் 1,046 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 2-வது கட்ட நேர்முக தேர்வுக்கு 1,067 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவல் டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்