புதுச்சேரியில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-12-18 15:49 GMT
புதுச்சேரி
புதுவையில்  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 29 பேர், வீடுகளில் 142 பேர் என 171 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பாதிப்பு 0.87 சதவீதமாகவும், குணமடைவது 98.41 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 460 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 730 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 13 லட்சத்து 37 ஆயிரத்து 697 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்