எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு: கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திருச்சி, நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
சென்னை,
திருச்சி, நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.-யாக இருந்தவர் பூமிநாதன். கடந்த மாதம் 21ம் தேதி ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் அருகே உள்ள பள்ளத்திவயல் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மணிகண்டனுக்கு ஜாமின் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நேற்று முன் தினம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி மணிகண்டனுக்கு ஜாமின் கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது புதுக்கோட்டை சிறையில் இருந்த மணிகண்டன் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.