தமிழகத்தில் மேலும் 627 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649 இல் இருந்து 627 ஆக குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 1,04,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 627 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனாவால் மேலும் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 36,656 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 8 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,476 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 687 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,93,830 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் பாதிவான மாவட்டங்கள் விவரம்;
கோவையில் 106 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 104 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 49 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 47 ஆக குறைந்தது. செங்கல்பட்டு -45, திருப்பூர் -43, சேலம் -39, நாமக்கல் -36, திருவள்ளூர் -17, திருச்சி -15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.