குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படுமா? - தயாநிதிமாறன் கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படுமா? என்ற மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.;

Update:2021-12-10 05:51 IST
சென்னை, 

மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், 'இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?' என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் 12.12.2019 அன்று கொண்டு வரப்பட்டது. 10.1.2020 முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 31.12.2014-க்கு முன்பாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், பவத்தம், ஜெயின், பார்சி ஆகிய சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் உதவியாக இருக்கும். இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த விவகாரம் பற்றி வேறு எதுவும் தெரிவிக்க முடியாது' என்றார்.

எனினும், விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடரும்; உரிமக் காலம் முடிவடைந்தவுடன் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வசம் திரும்பி வந்துவிடும்.

இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்