ஹெலிகாப்டர் விபத்து: 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில், 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீலகிரி,
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய வீரர்களின் உடல்கள் அடையாளம் காண தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.