தென்சென்னை பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராயநகர் ஆகிய பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2021-11-08 03:39 IST
சென்னை,

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராயநகர் ஆகிய பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, அவற்றை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சைதாப்பேட்டை, ஆட்டுத்தொட்டி பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். பின்னர், ஆட்டுத்தொட்டி, செங்கேணியம்மன் கோவில் தெரு மற்றும் வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜே.எம்.எச்.அசன்மவுலானா, எஸ்.அரவிந்த்ரமேஷ், தலைமைச்செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்