குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கம்: உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 2-வது இடம்

குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கியதற்காக உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.;

Update:2021-10-25 00:20 IST
சென்னை, 

உலகத்தில் உள்ள உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான முனையங்களில் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை குறித்த நேரங்களில் இயக்கப்படுகிறதா? என்பதை உலக அளவில் தனியார் விமான அமைப்பு கண்காணித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடும்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் விமானங்களை உரிய நேரத்தில் இயக்கிய உலக அளவிலான 100 விமான நிலையங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதில் உரிய நேரத்தில் விமானங்களை இயக்கியதற்காக ஜப்பான் நாட்டில் உள்ள நகஷிபிட்ச்சு விமான நிலையம் முதல் இடத்தையும், அதற்கு அடுத்தபடியாக 99 புறப்பாடு விமானங்களை உரிய நேரத்தில் இயக்கியதற்காக தூத்துக்குடி விமான நிலையம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேற்கண்ட தகவலை தூத்துக்குடி விமான நிலைய ஆணையகம் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்