மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணாராஜா சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
மேலும் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியதால், இந்த 2 அணைகளில் இருந்தும் அதிகளவு தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக காணப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு 21,692 கன அடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டுர் அணையில் 44.64 டி.எம்.சி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.