செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மதியம் 1 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபர் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2021-01-05 11:28 IST
கோப்பு படம்
சென்னை,

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, இன்று பிற்பகல் 1 மணிக்கு முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. 

ஸ்ரீபெரும்புதுர் -குன்றத்தூர் சாலை தடைபடும் என்பதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  உபரிநீர் திறப்பின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்