சென்னையில் மழை தேங்கி இருந்ததால் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் தவறி விழுந்து முதியவர் பலி

சென்னையில் மழை தேங்கி இருந்ததால் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்துள்ளார்.;

Update:2020-12-09 10:43 IST
சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுநராக இருந்து வந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் கழிவுநீர் தேங்கும் பாதாள சாக்கடை அருகே இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி முற்றிலுமாக மறைந்திருந்த நிலையில் பள்ளம் தெரியாமல் நரசிம்மன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்தார் இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர்  நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேலும் செய்திகள்