மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் டுவீட்

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2020-10-16 02:40 GMT
சென்னை,

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றைக்கு (16-ம் தேதி) அவரின் நினைவு நாள். அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்