நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.;
மதுரை,
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அண்மையில் நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிரசன்ன ராஜன் இந்த முறையீட்டைச் செய்தார். அந்த முறையீட்டில் அவர் கூறியுள்ளதாவது;-
“அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டு, இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு இன்றே அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீட் தேர்வு சம்பந்தமான இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.