நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து வழக்கு; தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர்.

Update: 2020-10-12 19:30 GMT
சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர். இதில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், ப.சிதம்பரம் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ராஜகண்ணப்பன் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று இறுதிக்கட்ட விசாரணைக்காக வந்தது. அப்போது, ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, ஆர்.தியாகராஜன், மனுதாரர் ராஜகண்ணப்பன் சார்பில் வக்கீல் ஜி.சரவணக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்