திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி இன்று காலை சிறப்பு தீப ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு நடந்த வி.ஐ.பி. தரிசனத்தில், தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக அவர்கள் அனைவரும் நேற்றிரவே புறப்பட்டு சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.