ஆலோசனைக்குப் பிறகு தேனியில் இருந்து சென்னை புறப்பட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தேனியில் ஆதரவு நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டார்.
தேனி,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 2-ந் தேதி பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் அவர் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், நீதிபதி, மாணிக்கம், சரவணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்று 2-வது நாளாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தேனியில் ஆதரவு நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டார். நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டார்.