"மத்திய அரசு நடத்தும் புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிப்பு" - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-02 11:58 GMT
சென்னை,

தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில்,தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குறியது. 

தமிழோ,ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால்,இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்