மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கிராம சபை கூட்டம் ரத்து என தகவல்

கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-01 16:28 GMT
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசுதினம், காந்திஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மதுரை, திருச்சி, திருவாரூர், நெல்லை, கடலூர், தஞ்சாவூர் விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருப்பூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம்,தருமபுரி, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி மற்றும் ஆக.,15ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்