சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்
சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை போலீசில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,423 ஆக உயர்ந்தது.
தீவிர சிகிச்சையின் பலனாக நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்பட 17 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக் குள்ளாகி 2,165 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். சென்னை போலீசில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.