தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜனுக்கு துரோணாச்சாரியார் விருது அவதார் நிறுவனம் வழங்கியது

தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜனுக்கு துரோணாச்சாரியார் விருது அவதார் நிறுவனம் வழங்கியது

Update: 2020-09-20 00:08 GMT
சென்னை,

டெல்லியில் உள்ள மூத்த மற்றும் பிரபல மருத்துவ நிபுணர்களின் குழுமமான அவதார் நிறுவனம் சிறுநீரக நிபுணர்களின் மாநாட்டை காணொலி வாயிலாக நடத்தியது. இந்த மாநாட்டில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசையின் கணவரும், பிரபல சிறுநீரக நிபுணருமான டாக்டர் பி.சவுந்தரராஜனுக்கு, துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.

டாக்டர் பி.சவுந்தரராஜன் சிறுநீரக மருத்துவத்துறையில் 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்தவர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்தியவர். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் சிறுநீரக சிகிச்சையில் பங்கேற்றவர்.

தற்போது அவர் சண்டிகர் பட்டமேற்படிப்பு அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிர்வாக குழுவில் உறுப்பினராக இருக்கிறார். மேலும், ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக நிபுணராகவும், காஞ்சீபுரம் சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்