உரிமைமீறல் குழு நோட்டீசை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
உரிமைமீறல் குழு நோட்டீசை எதிர்த்து தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, அதை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
சென்னை,
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்த தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் உரிமைமீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில், அடிப்படை தவறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதினால், உரிமைமீறல் குழு புதிய நோட்டீசை அனுப்பலாம்” என்று உத்தரவிட்டனர்.
நீதிபதி விசாரிக்க மறுப்பு
இதையடுத்து கடந்த 7-ந்தேதி மீண்டும் உரிமை மீறல் குழு, தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முதலில் நான் தான் விசாரித்தேன்.
தற்போது 2-வது நோட்டீசையும் விசாரிக்க விரும்பவில்லை. அதனால் வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.