பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடி, மொத்த கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும்.
கடந்த மாதம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ததால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அதன்பின், பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சரிந்தது.
இந்நிலையில் சில தினங்களாக நீலகிரி மாவட்ட பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 778 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,044 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 99.15 அடியாக உள்ளது.
அணையிலிருந்து அரக்கன்கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு, 800 கன அடி; கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது 28.டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.