சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-07-25 01:31 GMT
சென்னை,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தத் தொடங்கின.

எனினும் ஜூன் மாத இறுதியில் விலை எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது வரையில் நீடிக்கிறது. வாகனப் போக்குவரத்து இன்னும் முழுமையாகத் தொடங்காத நிலையில் பெட்ரோல், டீசலுக்கான தேவை மிகவும் குறைவாக இருக்கிறது.

சென்னையில் இன்று (ஜூலை 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.78.73 ஆகவும் இருக்கிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.80.43

டெல்லியில் டீசல் விலை - ரூ.81.64

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை - ரூ.82.10

கொல்கத்தாவில் டீசல் விலை - ரூ.76.77

மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.87.19

மும்பையில் டீசல் விலை - ரூ.79.33

இம்மாத இறுதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அதுவரையில் பெட்ரோல், டீசல் விலையும் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்