மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.போராட்டம்
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி தனது வீட்டின் முன்பு மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 16-ந்தேதி அக்கட்சியின் மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மின் கட்டணம் “ரீடிங்“ எடுத்ததில் உள்ள குழப்பத்தை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் அந்த தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்கவேண்டும்.
அப்படி குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாத தவணையாக செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந் தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நேற்று காலை தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி கருப்பு கொடி ஏற்றி தங்களது வீடுகளின் முன்பாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து ஒரு கையில் கருப்புக்கொடி ஏந்தியும், மற்றொரு கையில் “ஷாக் அடிப்பது மின்சாரமா, மின் கட்டணமா” என்ற பதாகையை ஏந்தியபடி கண்டன குரல் எழுப்பினார். முன்னதாக அவர் தனது வீட்டின் வாசலில் கருப்பு கொடி ஏற்றினார். காலை 10 மணி முதல் 10.20 மணி வரையிலான 20 நிமிடங்கள் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்டன கோஷம் எழுப்பினார்.
இந்த போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :-
கொரோனா நோய்த்தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக்கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த கொள்ளை நோய் காலத்தில் மக்களை காக்க தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் அநியாய கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது. இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை. ஊதியம் இல்லை. தொழிலும் இல்லை. வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருக்கவேண்டும்.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. இதனை கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சை பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்து விட்டு மழுப்பிக்கொண்டு இருக்கிறாரா?
இத்தகைய மின் கட்டண கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் சார்பில் இன்று (நேற்று) காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக்கண்டித்தோம். கருப்பு கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பை காட்டினோம். தி.மு.க.வினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள். இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்கு படுத்துங்கள். குறையுங்கள். சலுகை காட்டுங்கள். மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அ.தி.மு.க. அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன்பு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் முன்பு மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. அலுவலகம் முன்பு டி.ஆர். பாலு எம்.பி. தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.
சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையிலும், ஓட்டேரி செல்லப்பா முதலி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையிலும், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் ராயபுரம் சூரிய நாரயணன் தெருவிலும் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அடையாறில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.கழககுமார், அடையார் ச.ஸ்ரீகாந்த், வீரவன்னியர் பேரவை சென்னை மாவட்ட செயலாளர் சைதை மோகன் கலந்துகொண்டனர்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் சென்னை அண்ணா நகரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.