கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சித்த மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் முயற்சிகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையிலும் உடலை நல்ல ஆரோக்கியத்துடன் கவனித்துக்கொள்ளவேண்டும்.
சித்த மருத்துவம் நல்ல பலன் கொடுத்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சித்த மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
மக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும். என்95 ரக முககவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும். கொரோனா விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யவேண்டாம். ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால்தான் நோயை எதிர்க்கொள்ளமுடியும். கொரோனா நிவாரண உதவியாக மக்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை போதாது. எனவே இதனை மேலும் உயர்த்தி வழங்கவேண்டும்.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறேன். உடற்பயிற்சி நிலையங்களை திறந்தால் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவிக்கரமாக இருக்கும்.
ஊரடங்கு காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சியும், நான்கரை மணி நேரம் சமையலும் செய்கிறேன். பிரியாணி வகைகளும் சரி, மட்டன், சிக்கன் உணவு வகைகளையும் வீட்டில் நானே செய்கிறேன். ‘யூடியூப்‘ வீடியோக்களை பார்த்து, பதம் பார்த்து நானே உணவுகளை தயாரிக்கிறேன்.
என்னுடைய தாயார் சமையல் செய்யும்போது அதனை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். சமையல் மீது எனக்கு முதலில் இருந்தே அதிக ஆர்வம் உண்டு. ஒருவேளை பின்னாளில் தொழிலை மாற்றவேண்டிய சூழல் வந்தால், 50 சதவீதம் வர்த்தக ரீதியான ஓட்டல்களை வைப்பதற்கு தகுதியானவனாக நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.