வீட்டில் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது பற்றி பரிசீலனை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.சுதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.சுதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் உள்ளது. கொரோனா வைரசை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, பள்ளி குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க உத்தரவிடவேண்டும். அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘முட்டை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “முட்டை வழங்குவது தொடர்பாக அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.