உத்தரபிரதேசத்தில் 8 பேர் சுட்டுக்கொலை: ரவுடிக்கு தகவல் கொடுத்த 3 போலீசார் பணி இடைநீக்கம்
உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பிக்கு கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே என்ற பிரபல ரவுடியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய கடந்த 2-ந்தேதி போலீசார் சென்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பிக்கு கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே என்ற பிரபல ரவுடியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய கடந்த 2-ந்தேதி போலீசார் சென்றனர். அப்போது அவனது கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டு 8 போலீசாரை கொன்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து கொடுப்போருக்கு ரூ.2½ லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்போகும் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே சில போலீசார் ரவுடியிடம் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட சவுபேபூர் போலீஸ் நிலைய அதிகாரி வினய் திவாரி என்பவர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு என மேலும் 3 போலீசாரை உயர் அதிகாரிகள் தற்போது பணி இடைநீக்கம் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.