சென்னையில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த திருத்தணி அருகில் 3 புதிய தடுப்பணை பொதுப்பணித்துறை திட்டம்
சென்னை மாநகரின் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த திருத்தணி அருகில் 3 புதிய தடுப்பணைகளை கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் வழிகளில் வெள்ள நீர் மற்றும் ஏரி தண்ணீரை முறையாக சேமிப்பதற்காக 3 புதிய தடுப்பணைகளை கட்ட பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை திட்டம் ஒன்றை தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
அவற்றில் ஒன்று, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலுப்பூரில் கட்டப்பட உள்ளது. இது சென்னையின் குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க உதவும். சங்கிதகுப்பம் மற்றும் குமராஜாபேட்டையில் பள்ளிப்பட்டு தாலுகாவில் குசா ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு தடுப்பணைகளும், ரூ.26.75 கோடி செலவில் இலுப்பூரில் மற்றொரு கட்டமைப்பும் கட்டும் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி அருகே இலுப்பூரில் உள்ள நகரி ஆற்றின் குறுக்கே 230 மீட்டர் நீளத்தில் கட்டப்படும் தடுப்பணை மூலம் 30 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இதன் மூலம் சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்படும் தடுப்பணையால் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் திறனை அதிகரிப்பதுடன், 296 ஹெக்டேர் நிலத்தில் பாசனத்தை உறுதிப்படுத்தும்.
ஆந்திராவில் தோன்றிய நகரி ஆற்றின் துணை நதிகள் லாவா மற்றும் குசா நதிகள். 17 கிலோ மீட்டர் நீளமுள்ள குசா நதி, சுமார் 4 கிலோ மீட்டர் தமிழக எல்லைக்குள் பாய்கிறது. இரண்டு நதிகளும் பள்ளிப்பேட்டையின் அருகே இணைந்து மீண்டும் நகரி ஆறாக மாறி 69 கிலோ மீட்டர் கடந்து பூண்டியை அடைகிறது. கோசஸ்தலையாறைத் தவிர, இந்த நீர்வழிகளில் இருந்தும் பூண்டிக்கு தண்ணீர் வருகிறது.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, சங்கிதகுப்பம், வெங்கடராஜுகுப்பம் மற்றும் வெலியாகரம் கிராமங்களின் பல விவசாய வயல்களை வெள்ளத்தில் மூழ்கடித்த குசாவில் வெள்ளத்தைத் தடுக்க இரண்டு தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பூண்டி ஏரியில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சங்கிதகுப்பத்தில் 66 மீட்டர் நீள தடுப்பணையை சுற்றியுள்ள 58 விவசாய ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், 53 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெறுவதற்கும் உதவும். பல கிராமங்கள் குசா நதி மற்றும் நகரி ஆற்றை தங்கள் குடிநீருக்காக நம்பியுள்ளன. தடுப்பணைகள் மேற்பரப்பு நீரைத் தக்கவைத்து ஆற்றின் மணல் படுக்கையைப் பாதுகாக்கும்.
நிலத்தடி நீர் திறனை மேம்படுத்துவதற்காக குமராஜாபேட்டையில் 80 மீட்டரில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 40 விவசாய ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்க உதவும். குசாவின் வெள்ளக் கரைகளும் பலப்படுத்தப்படும்.
ஏற்கனவே பூண்டி நீர்த்தேக்கத்தின் மேலே நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஏரிகளில் தண்ணீர் சேமிக்க ஒவ்வொரு 34 கிலோ மீட்டர் இடைவெளியிலும் இதுபோன்ற வசதிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். சில மாதங்களில் புதிய தடுப்பணைகளுக்கான பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.