எஸ்.எஸ்.எல்.சி. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ‘ஏ’ என்று குறிப்பிட தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 இறுதிநாள் பொதுத்தேர்வு கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த மாணவர்களுக்கு அவர்களுடைய வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் என 100 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட இருக்கிறது.
இதற்காக மாணவர்களின் வருகைப்பதிவு விவரங்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்கள் ஆகியவற்றை பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி முதல் பள்ளி நாட்கள் எத்தனை? அதில் மாணவர்கள் வருகைப்புரிந்த நாட்கள் எத்தனை? போன்ற விவரங்கள் அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. அந்த பணிகள் தற்போது முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்ககம், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கு முழுமையாக வராத மாணவர்கள் குறித்த விவரங்கள் இருந்தால், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம்மூலம், அவர்களுடைய மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் இடத்தில் ‘ஏ’ (ஆப்சென்ட்) என்றும் பதிவிடவேண்டும்.“ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.