தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.;

Update:2020-06-14 11:41 IST
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உயிர் பலியும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. இதன் மூலம் கொரோனா கோரதாண்டவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது.  புதிதாக 1,989 பேர் தொற்றில் சிக்கினர். இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.  முதல் அமைச்சர், கொரோனா பாதிப்பு பற்றி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.  இதில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.  இந்த கூட்டத்தில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள், கள நிலவரம் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்