ரூ.265 கோடி செலவில் பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல பகுதிகளில் ரூ.265 கோடி செலவில் கட்டப்பட்ட பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-06-08 23:16 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாக கட்டிடம், வேலூர் மாவட்டம் துத்திகாடு- நஞ்சுகொண்டபுரம் சாலையில் நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தனகொண்டபல்லி- மேல்கொல்லப்பல்லி சாலையில் கொட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாக கட்டிடம் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சியில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வடகடல் சாலையில், கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், திருவாரூர் மாவட்டம் ரங்கநாதபுரம் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் நடுப்படுகை சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், மொட்டையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி கட்டிடங்கள், மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் உற்பத்தி, பதனிடுதல் மற்றும் செயலாக்க மைய மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மைய கட்டிடம், பொது சமையலறை மற்றும் உணவு வழங்கும் சேவைப் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.40.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டிடங்கள் மற்றும் பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம் வாரணாசி- கன்னியாகுமரி சாலையில் காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தட சாலை மேம்பாலம், வாரணாசி- கன்னியாகுமரி சாலையில் செல்லூரில் சாலை மேம்பாலத்தின் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சேவை சாலை, மதுரை வடக்கு மற்றும் மேற்கு வட்டம், எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் முதல் சர்வேயர் காலனி, மதுரை அழகர் கோவில் மேலூர் சாலை மூன்றுமாவடி ஐயர்பங்களா- பி அண்டு டி நகர், ஆலங்குளம் செல்லூர், குலமங்கலம் சாலை, ஆனந்தம் நகர், ஆனையூர் சாலை, கூடல்நகர் வானொலி நிலையம் வரையிலான நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி சாலைகளை உள்ளடக்கிய இணைப்பு சாலையை தரம் உயர்த்துதல் மற்றும் அகலப்படுத்துதல், சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல், பஸ் நிறுத்துமிடம் அமைத்தல், சிறுபாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் அமைக்கும் பணிகள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், வேலூர் சாலையில் பள்ளிப்பாளையம் ரெயில்வே நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை- நாட்ராம் பள்ளி சாலையில் ரெயில்வே கடவுக்கு மாற்றாக ஜோலார்பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரெயில்நிலையங்களுக்கு இடையில் ஜோலார்பேட்டையில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், அரியலூர் மாவட்டம் பெரம்பலூர்- தஞ்சாவூர் சாலையில் ரெயில்வே கடவுக்கு மாற்றாக அரியலூர் மற்றும் சில்லக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே அரியலூரில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், புதுக்கோட்டை மாவட்டம் சித்திராம்பூரில் பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி கூகுடி சாலையில் விருசுழி ஆற்றின் குறுக்கே கண்ணங்குடியில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவள்ளூர் மாவட்டம் சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் நசரத்பேட்டையில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம், சென்னை கிண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையக் கட்டிடம், என மொத்தம் ரூ.265.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலைப் பணிகள், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்