தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2020-06-05 14:25 IST
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,காரைக்கால்,சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8-ம் தேதி மத்திய மேற்குவங்க்கடலில் கிழக்கு பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் இன்றும், நாளை தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம் (சென்டிமீட்டரில்)

தேவலா (நீலகிரி) 3, மைலாடி (கன்னியாகுமரி) நாகர்கோவில் (கன்னியாகுமரி) வால்பாறை (கோவை) சோலையார் (கோவை) தலா 2, திருப்பத்தூர் (திருப்பத்தூர்) பாலக்கோடு (தருமபுரி) காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 1 மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்