தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ரூ.50 லட்சம் நிதியை எடப்பாடி பழனிசாமி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் வழங்கினார்.;
சென்னை,
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவரும், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் இசைஞான குருவாக விளங்கியவரும், இந்திய விடுதலை போராட்டத்தின் போது பாரதியாரை போல் ஆங்கில அரசால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டவரும், கரகரப்பிரியா ராகத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவரும், பாரதியார் கவிதைகள் எழுத ராகங்களை எடுத்து கொடுத்தவரும் பல்வேறு பட்டங்களும், பரிசுகளும் பெற்றவரும், வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் இசைமேதை நல்லப்பசுவாமி.
அவருடைய நினைவை போற்றும் வகையில் 2018-19-ம் ஆண்டுக்கான செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கையின்போது, ‘இசை அறிஞர்களாலும், வித்வான்களாலும், இசை மகா சமுத்திரம் என்றும், மாமேதை என்றும் போற்றி புகழப்பட்ட இசைமேதை நல்லப்ப சுவாமிக்கு நினைவுத்தூண் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நல்லப்ப சுவாமியின் நினைவுத்தூணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) உறுப்பினர்களின் நலனுக்காக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ‘பெப்சி’ மூலம் திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் 26.8.2018 அன்று பையனூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், ‘ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி 16.9.2019 அன்று ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது 2-ம் கட்டமாக ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் க.சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் பொருளாளர் சாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.