10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு “இப்போதும் குழப்பம்தான்” மு.க.ஸ்டாலின் கருத்து

10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு “இப்போதும் குழப்பம்தான்” என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-19 21:00 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15-க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான்.

அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?. மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்