கொரோனா நிவாரணம் பெற தபால் அலுவலகத்தில் வங்கி கணக்கு

கொரோனா நிவாரணம் பெற தபால் அலுவலகத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம்.

Update: 2020-05-13 19:35 GMT
சென்னை, 

பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு நிவாரண நிதி உதவியை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதனடிப்படையில் நலவாரிய கூடுதல் கமிஷனர், மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

அதில் பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்களுக்கு, தபால் அலுவலகத்தில் உள்ள வங்கிகளில் (ஐ.பி.பி.பி.) சேமிப்பு கணக்கு தொடங்கி, அதன் மூலம் கொரோனா நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதன்படி சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் வங்கி கணக்குகளை தொடங்கி பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை சென்னை மத்திய கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்