தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொழில்துறை கூடுதல் ஆணையராக இருந்த டி.பி. ராஜேஷ், தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் தனிச் செயலாளராக இருந்த சுகந்தி, காகிதம் மற்றும் எழுதுபொருள் கழக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
உதவி தேர்தல் ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனா, சுற்றுலா மற்றும் கலாச்சார துறை கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குநராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.