விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் - தந்தை அப்துல் லத்தீப்
விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என தந்தை அப்துல் லத்தீப் கூறி உள்ளார்.;
சென்னை
சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீப் மற்றும் உறவினரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தினர். மாணவி பாத்திமா தொடர்பான ஆவணங்களை காவல்துறையிடம் தாக்கல் செய்ய பாத்திமாவின் பெற்றோருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
பின்னர் அப்துல் லத்தீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் அளித்துள்ளோம்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என காவல்துறை உறுதி அளித்துள்ளது. விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.