அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-10-09 12:01 GMT
நாங்குநேரி,

நெல்லை மாவட்டம்  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இந்நிலையில்  நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென மயங்கி கிழே விழுந்தார். 

இதனையடுத்து அக்கட்சியினர், காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்