தீபாவளி பண்டிகை: சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கான சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது.
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இந்த ஆண்டும் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக கே.கே. நகர் பஸ் நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து 24-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4,265 பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 940 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 27-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை 4,627 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு சென்னை தாம்பரம் மெப்ஸ், ஐஆர்டி தரமணி, மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆயுத பூஜை விடுமுறைக்கான சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரும் 23-ம் தேதி முதல் 26-ந்தேதிவரை முன்பதிவு மையங்கள் செயல்படும்.
மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.