‘நீட்’ தேர்வு முறைகேடு: மேலும் 25 மாணவர்கள் சிக்குகிறார்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஆலோசனை
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேட்டில் மேலும் 25 மாணவர்கள் சிக்குகிறார்கள் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது.
சென்னை,
மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேடு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில், விஞ்ஞான ரீதியாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஐ.ஜி.சங்கர், சூப்பிரண்டுகள் விஜயகுமார், ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சென்னையைச்சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன். மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன். மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ். மாணவர் இர்பான், அவரது தந்தை முகம்மது சபி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் மேலும் 25 மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்ட மருத்துவக்கல்லூரி ஒன்றின் அனுமதியை, ‘அகில இந்திய மருத்துவ கவுன்சில்’ ரத்து செய்துவிட்டது. அந்தக்கல்லூரியின் நிர்வாக கோட்டாவில் படித்த 30 மாணவர்கள் வேறு எந்தக்கல்லூரியிலும் சேர்க்கப்படவில்லை. அந்த 30 மாணவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இந்த ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் நெட்வொர்க் அமைத்து இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது. முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாணவரும் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் 4 பேர் ஆள் மாறாட்டத்தின் மூலம் நீட்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய 4 பேரில், யார் அதிக மதிப்பெண் வாங்குவார்களோ, அந்தமதிப்பெண்ணை எந்த மாணவருக்காக தேர்வு எழுதினார்களோ, அந்த மாணவரின் மதிப்பெண்ணாக கம்ப்யூட்டரில் திருத்தியிருக்கிறார்கள்.
ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய 4 பேர்களுக்கும் முதலில் முன்பணமாக தலா ரூ.1 லட்சம் வீதம் கொடுத்துள்ளனர். அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தேர்வு முடிவு வெளியான உடன் ரூ.5 லட்சம் தனியாக சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது. ‘நீட்’ தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்திலும் தேர்வு எழுதலாம் என்ற விதியை பயன்படுத்தி இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த ‘நீட்’ தேர்வு முறைகேட்டுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தோண்ட, தோண்ட மோசடியில் ஈடுபட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இந்தியா முழுவதும் இந்த ‘நீட்’ தேர்வு முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.