சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.29,368க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2019-09-07 12:26 IST
சென்னை,

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து கடந்த 4ந்தேதி சவரன் ஒன்றுக்கு 30 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.  இதனால் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120க்கு அன்று விற்பனையானது.  40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,640 அதிகரித்து இருந்தது.

இதன்பின்பு அன்று மாலையில் விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.29,368க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்