சென்னை,
ஒடிசா கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தநிலையில்,
போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல் ,அண்ணாநகர், சூளைமேடு, சாலிகிராமம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.