தமிழகத்தில் 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ13 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-
அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள பொருட்காட்சி பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் கிடைத்துள்ளது. காவிரி- கோதாவரி இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறை அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பழனிசாமியே வருவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.