“இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது” அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இன்று பிறந்தநாள் காணும் இளையராஜாவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-02 09:47 GMT
சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் இளையராஜாவுக்கு ,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

இளையராஜா ஆற்றிய பணிகளுக்கு "பாரத ரத்னா" விருது வழங்குவதே, அவருக்கு சரியான அங்கீகாரமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்