தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழுவிபரம்...
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி தோல்வியை தழுவியது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்றது. பா.ஜனதா கூட்டணிக்கு 348 தொகுதிகள் கிடைத்துள்ளது. தென் மாநிலமான தமிழகத்தில் பா.ஜனதா இம்முறை மாநிலத்தில் பெரும் கட்சியான அதிமுக மற்றும் குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கியைக் கொண்ட பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் மோடியின் அலை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனை திமுக நிறுத்திவிட்டது.
அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வென்றது. அதிமுக கூட்டணியில் பா.ஜனதா 5 இடங்களை கேட்டுப்பெற்று போட்டியிட்டது. இந்தியா முழுவதும் பா.ஜனதா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. தமிழகத்தில் பெரும் கூட்டணியை அமைத்தும் வெற்றியை தனதாக்க முடியவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களுமே தோல்வியை தழுவினர். இதில் மத்திய அமைச்சராக இருந்த பொன். ராதா கிருஷ்ணனும் படுதோல்வியை தழுவினார். லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா படுதோல்வியை தழுவியது.
பா.ஜனதா வெற்றிக்கு சாதகமான தொகுதியான கோவையிலும் தோல்விதான் கிடைத்தது. கோவை அதிமுகவின் கோட்டையாக விளங்கினாலும் பா.ஜனதாவிற்கு கைக்கொடுக்கவில்லை. கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 145104 வாக்குகளை அதாவது 11.6 சதவீதம் வாக்குகளை தன்வசப்படுத்தியது. நாம் தமிழர் கட்சியும் 60519 வாக்குகளைப் பெற்றது. இங்கு டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் என்.ஆர்.அப்பாதுரை 38,024 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
பா.ஜனதா வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு விபரம்:-
கோயம்புத்தூர்
வெற்றி வாக்கு வித்தியாசம்:- 200000- த்திற்கும் அதிகம்
பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 571150
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 392007
சிவகங்கை
வெற்றி வாக்கு வித்தியாசம்:- 330000--த்திற்கும் அதிகம்
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 566104
எச்.ராஜா (பாஜக) வாக்குகள்:- 233860
ராமநாதபுரம்
வெற்றி வாக்கு வித்தியாசம்:- 127000-த்திற்கும் அதிகம்
நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்) வாக்குகள்:- 469943
நயினார் நாகேந்திரன் (பாஜக) வாக்குகள்:- 342821
கன்னியாகுமரி
வெற்றி வாக்கு வித்தியாசம்:- 260000-த்திற்கும் அதிகம்
ஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்) வாக்குகள்:- 627235
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 367302
தூத்துக்குடி
வெற்றி வாக்கு வித்தியாசம்:-340000-த்திற்கும் அதிகம்
கனிமொழி கருணாநிதி (திமுக) வாக்குகள்:- 563143
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) வாக்குகள்:- 215934