அறந்தாங்கியில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி பெண் தர்ணா போராட்டம்

அறந்தாங்கியில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2019-04-18 13:36 GMT
தமிழகத்தில் தேர்தலில் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோன்று அறந்தாங்கியிலும் பெண் ஒருவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 

இதுபற்றி அந்த பெண் கூறும்போது, இருமுறை இங்கு வாக்களித்துள்ளேன். இப்போது என்னுடைய பெயர் ஏன் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அப்பெண் வாக்குச்சாவடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகள்